இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல்டைம் ரெக்கார்டாக மாபெரும் வெற்றி பெற்று தற்போது 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது.

முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் ஷூட்டிங் தடைபட்டது இதனைத் தொடர்ந்து பல காரணங்களால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் பல தடைகள் நிலவியது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகைக்கு பிறகு இந்த தடைகள் நீங்கி தற்போது மீண்டும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்க இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி முதல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ரவிவர்மன் மற்றும் ரத்னவேலு இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, ”‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” கமல்ஹாசன் என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் அந்த பதிவு இதோ…

 

‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2022