STR நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்னேஷ் சிவன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் படம் வெளியாகி இவரை வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையில் அமர்த்தியது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நானும் ரௌடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனிருத்துடன் தொடர்ந்து வேலைபார்க்க தொடங்கினார் விக்னேஷ் சிவன்.இதனை தொடர்ந்து இவர் சூர்யா இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்தார்.இந்த படமும் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவற்றை தவிர பல படங்களில் படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.இவர் அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கி வருகிறார்.தனது நானும் ரௌடி தான் ஹிட் ஜோடி விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன்,சமந்தாவையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.இந்த படத்தினை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரன்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படத்தின் முன்னணி கதாபாத்திரங்களான விஜய்சேதுபதி,சமந்தா,நயன்தாரா உள்ளிட்டோருக்கு தனி தனியே போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.