“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..

விடுதலை பட பாடலின் இரண்டாவது வீடியோ வைரல் - Ilaiyaraja Dhanush Combo Viduthalai song 2nd promo viral | Galatta

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஆளுமை இசையமைப்பாளர் இசைஞானி இளையாராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தும் இந்திய மொழிகளில் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் இசையமைத்தும் தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இன்றும் அவர் இசையால் ஆட்டுவிக்கும் ஆளுமையாக இளையராஜா இருந்து வருகிறார். பல தசாப்தங்களாக திரையுலகில் இருந்தாலும் இன்றும் அவரது இசை புதுமையும் ரசனையும் கொட்டி தீர்க்கிறது. உலகளவில் புகழ்பெற்ற இளையராஜா இன்று இளைஞர்களின் ராக தேவனாக வலம் வருகிறார். இன்றும் அயராமல் உழைத்து கொண்டிருப்பவர் இளையராஜா, பல நிகழ்சிகளும் பல படங்களிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி பிஸியாகவே வைத்து கொண்டு வருகிறார். தற்போது இளையராஜா இசையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் விடுதலை திரைப்படம்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதானயகனகவும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் நடித்து வரும் திரைப்படம் ‘விடுதலை’. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி உருவாகும் இப்படத்தில் சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறனின் அடுத்தப்படமாக வரும் விடுதலை திரைப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள "ஒன்னோட நடந்தா.." எனும் பாடலுக்கான முதல் புரோமோ நேற்று சர்ப்ரைஸாக வெளியிட்டார் இளையராஜா. முதல் முதலில் இளையராஜா இசையில் பாடுகிறார் நடிகர் தனுஷ். தனுஷ் மிகப்பெரிய இளையராஜா ரசிகர். எந்த மேடையில் ஏறினாலும் இளையராஜாவை மேற்கோள் காட்டாமல் இறங்காத தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி மாறனின் விருப்பமான நடிகரும் நண்பருமான தனுஷ் இப்பாடலை பாடுவது மேலும் பாடலுக்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.  இளையராஜா சொல்லி கொடுக்க அவருடன் குறும்பு தனத்துடன் வெளியான வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. மேலும் முழு பாடல் நாளை பிப்ரவரி 8 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th

🎼 @ilaiyaraaja
🎤@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K

— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ வின் இரண்டாவது புரோமோ வை வெளியிட்டார் இளையராஜா. தனுஷுக்கு பாடல் ஸ்ருதியை சொல்லி கொடுக்கும் இளையாராஜா. மேலும் படத்தில் சூரி நடித்துள்ள ஒரு காட்சியையும் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Promo 2 of #Onnodanadandhaa releasing on Feb8th @11am #Viduthalai part 1

🎼 @ilaiyaraaja
🎤@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga#Vetrimaaran @elredkumar @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ @GrassRootFilmCo @BhavaniSre @mani_rsinfo pic.twitter.com/Z1pDl8x09C

— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 7, 2023

இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் விடுதலை திரைப்படத்தினை  RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“அவ்ளோ easy அ கடுப்பேத்திட முடியுமா?” ஆர்.ஜே பாலாஜியின் எரிச்சலூட்டும் நேர்காணல் -  வைரலாகும் ‘ரன் பேபி ரன்’ Interview இதோ..
சினிமா

“அவ்ளோ easy அ கடுப்பேத்திட முடியுமா?” ஆர்.ஜே பாலாஜியின் எரிச்சலூட்டும் நேர்காணல் - வைரலாகும் ‘ரன் பேபி ரன்’ Interview இதோ..

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. -  திரையுலகினர் நேரில் அஞ்சலி..
சினிமா

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. - திரையுலகினர் நேரில் அஞ்சலி..