ஆட்டநாயகனின் Non Stop ஆட்டம்.. வாரிசு வசூல் அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..

வாரிசு பட வசூலை அறிவித்த படக்குழு - Vijay Varisu box office gross touches Rs 300 Crores | Galatta

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கல் விடுமுறையையொட்டி வெளியான திரைப்படம் ‘வாரிசு’ தில் ராஜு சார்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய வாரிசு திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். பட்டி தொட்டி எங்கும் பொங்கல் விடுமுறையை குதூகலமாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வாரிசு படத்திற்கு ஒளிப்பதிவாளர்  கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.KL படத்தொகுப்பு செய்தார். மேலும்  தமன்.S  இசையில் பாடல்கள் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு திரைப்படம் வெளியாகி 25 நாள்கள் கடந்த நிலையிலும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். கலவையான விமர்சனத்தை பெற்றாலும் குடும்ப உணர்வை மையப்படுத்தி உருவான வாரிசு திரைப்படம் உலகெங்கிலும் வசூல் வேட்டையை விடாமல் தொடர்ந்தது. அதன்படி வாரிசு திரைப்படம் உலகளவில் 11 நாளில்  250 கோடி வசூல் முன்னதாக எடுத்திருந்தது.  

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவின் அறிவிப்பை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் படக்குழுவினருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்து குவிந்து வருகின்றனர். 

rj balaji in most annoying interview for run baby run movie promotions

Aatanayagan ON DUTY 🔥#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now 🤩#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E

— Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023

மேலும் தற்போது விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது லியோ படத்தை தொடர்ந்து வாரிசு திரைப்பட குழுவினர் வெளியிட்ட இந்த 300 கோடி வசூல் அறிவிப்பு ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. -  திரையுலகினர் நேரில் அஞ்சலி..
சினிமா

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. - திரையுலகினர் நேரில் அஞ்சலி..

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..

போட்றா வெடிய... செம்ம மாஸாக வந்த விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வீடியோ! ரிலீஸ் தேதி இதோ
சினிமா

போட்றா வெடிய... செம்ம மாஸாக வந்த விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வீடியோ! ரிலீஸ் தேதி இதோ