“அவ்ளோ easy அ கடுப்பேத்திட முடியுமா?” ஆர்.ஜே பாலாஜியின் எரிச்சலூட்டும் நேர்காணல் - வைரலாகும் ‘ரன் பேபி ரன்’ Interview இதோ..

வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் வித்யாசமான நேர்காணல் - Rj Balaji annoying interview viral on internet | Galatta

நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடித்து முதல் முதலில் திரில்லர் கதைக்களத்தில் நடித்து திரையில் கடந்த பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’ இயக்குனர்  ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வெளியீட்டுக்கு முன்பிலிருந்தே ஆர் ஜே பாலாஜி வித்யாசமான விளம்பர யுக்திகளை கையிலெடுத்து வந்திருந்தார். அனைத்து விளம்பர நிகழ்வுகளும் இணையத்தில் வெளியான நாளிலிருந்து டிரெண்டிங் தான். குறிப்பாக முன்னதாக அவர் நடித்திய haters meet அதிகம் பேசப்பட்டது. மேலும் கிளி ஜோசியம் பார்த்து படத்தை விளம்பர படுத்தியும், அதனை தொடர்ந்து பட விளம்பரத்திற்காக தன் மகனுடன் நேர்காணல் இறங்கினார். மேலும் இந்தியா நியுசிலாந்து கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று படத்திற்கு விளம்பர படுத்தினார். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் துவக்க விழாவிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும் ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கதாநாயகனுமான கிஷன் தாஸுடன் இணைந்து நேர்காணலில் இறங்கினார். இந்த நேர்காணல் வழக்கமாக இல்லாமல் விருந்தினரை எரிச்சலூட்டும் தோனியில் கேள்விகள் கேட்டும் நடந்து கொண்டும் இருந்திருப்பார்கள். குறிப்பாக படத்தின் பெயர் ரன் பேபி ரன் என்பதற்கு பதிலாக ‘ரன் தேவி ரன்’என்று குறிப்பிட்டும் சிறப்பு விருந்தினர் ஆர் ஜே பாலாஜிக்கு பதில் ஆர் ஜே விஜய் என்றும் குறிப்பிட்டும் கேள்விகள் கேட்டிருப்பார்கள். இந்த நேர்காணல் இணையத்தில்  வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் தற்போது இந்த நேர்காணல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

The most annoying interview & interviewer ever !!! 😎 @kishendas#RunBabyRun pic.twitter.com/3SMoEYt4Jn

— RJ Balaji (@RJ_Balaji) February 6, 2023

ரன் பேபி ரன் திரைப்படம் திரையில் வெளியாகி ஒரு புறம் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு புறம் தீவிரமாக வித்தியாசமான விளம்பர யுக்திகளில் இறங்கியுள்ளார் ஆர். ஜே பாலாஜி.

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..

போட்றா வெடிய... செம்ம மாஸாக வந்த விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வீடியோ! ரிலீஸ் தேதி இதோ
சினிமா

போட்றா வெடிய... செம்ம மாஸாக வந்த விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு வீடியோ! ரிலீஸ் தேதி இதோ

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்
சினிமா

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்