சூப்பர் ஹிட் பட டைட்டிலில் யோகி பாபுவின் அடுத்த காமெடி என்டர்டெய்னர்... கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

யோகி பாபுவின் லக்கி மேன் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,yogi babu in lucky man movie first look poster | Galatta

மக்களின் மனதை கவரும் நகைச்சுவை நாயகனாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் யோகி பாபு வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் களமிறங்கிய திரைப்படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்த பொம்மை நாயகி திரைப்படம் தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர், சிவகார்த்திகேயனின் அயலான், அரவிந்த் சுவாமியின் சதுரங்க வேட்டை 2, பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். முன்னதாக காசேதான் கடவுளடா, சலூன், பூச்சாண்டி பூமர் அங்கிள் மற்றும் மெடிக்கல் மிராக்கள் ஆகிய படங்கள் யோகி பாபு நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் தனது அடுத்த காமெடி என்டர்டெய்னர் திரைப்படமாக யோகி பாபு நடித்துவரும் திரைப்படம் லக்கி மேன். கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் மற்றும் கவுண்டமணி இணைந்து நடிக்க காமெடி ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் படமான லக்கி மேன் படத்தின் டைட்டிலில் யோகி பாபு நடிக்கும் இந்த லக்கி மேன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திங்க ஸ்டூடியோஸ் தயாரிக்க, பிரபல நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்குனராக அறிமுகமாகும் லக்கி மேன் திரைப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ராஜதந்திரம் மற்றும் துணிவு ஆகிய படங்களில் நடித்த வீரா, அப்துல், ரெய்ச்சல் ரெபேக்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் லக்கி மேன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் யோகி பாபுவின் லக்கி மேன் திரைப்படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

LUCK favours the brave, so we took a chance! Here's presenting the first look of our next, #LuckyMan! #WeGotLucky @iYogiBabu @balajesaar @ActorVeeraBahu @actorabdool_lee @raichalrabecca @RSeanRoldan @iamkarki @sandeepkvijay_ @sabadesigns213 @ganesh_madan @tkishore555 pic.twitter.com/iZh90SfElu

— Think Studios (@ThinkStudiosInd) February 6, 2023

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணைகிறாரா RRR பட நாயகன்? தீயாய் பரவும் தகவல்! விவரம் உள்ளே
சினிமா

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணைகிறாரா RRR பட நாயகன்? தீயாய் பரவும் தகவல்! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ பட காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

சினிமா

"வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணைந்த தனுஷ்!" - வேற லெவல் சர்ப்ரைஸ் அறிவிப்போடு வந்த அசத்தலான வீடியோ இதோ!