அட்ராசக்க.. 'வாத்தி' பட நாயகியின் தரமான முடிவு - குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்..

வாத்தி பட நடிகையில் தரமான முடிவு - Vaathi actress Samyuktha Said she did not like caste identity | Galatta

பிரபல மலையாள நடிகையும் தனுஷ் நடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் கதாநாயகியுமான சம்யுக்தா மேனன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'வாத்தி' படத்தின் விளம்பர வேலைக்காக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா, நிகழ்வில் படம் குறித்து பேசினார்

"நான் கேரளா, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண். நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை. ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில வாய்ப்புகளை நானே மறுத்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இதெல்லாம் நடந்தது போல் தோன்றுகிறது. இந்த வாத்தி திரைப்படத்தில் அரசுப் பள்ளி உயிரியல் ஆசிரியராக நடித்திருக்கிறேன். கல்வி சூழலில் உள்ள குறைபாடுகளை கூறும் திரைப்படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. நான் 12 வது வரை தான் படித்திருக்கிறேன்.‌அதன்பின் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஆனால் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதே நேரத்தில் இதைதான் படிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது". என்று கூறினார். மேலும் "என் பெயருக்கு பின்னால் இருக்கும் 'மேனன்' என்ற சாதி அடையாளத்தைப் பயன்படுத்தி கொள்வதில் எனக்கு விருப்பமில்லை தயவு செய்து என்னை 'சம்யுக்தா' என்றே அழையுங்கள் 'மேனன்' என்று குறிப்பிட வேண்டாம்" என்று கூறினார். இதனையடுத்து சம்யுக்தா அவர்களின் தரமான முடிவு அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்குரியதாய் மாறியது. தொடர்ந்து பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். முன்னதாக பிரபல மலையாள நடிகையான பார்வதியும் தன்பெருக்குப் பின்னால் இருந்த ‘மேனன்’ என்ற சாதி அடையாளத்தை நீக்கி, பார்வதி என்று அழைத்தால் மட்டும் போதும் என்று கூறியிருந்தார். அவரை தொடர்ந்து ‘தெகிடி’, ‘அவன் இவன்’ பட நடிகை ஜனனி தன் பெயருக்கு பின்னால் இருந்த ‘ஐயர்’ என்பதையும் நீக்கியிருந்தால் தற்போது அந்த வரிசையில் நடிகை சம்யுக்தாவும் சாதிக்கெதிராக இவ்வாறு பேசியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது கலாட்டா மீடியா தமிழ் பேட்டியில் வாத்தி திரைப்படம் குறித்தும் சம்யுக்தா திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியின் போது, 

அவர், "எனது சமூக வலைதளங்களில் எல்லாவற்றிலும் சம்யுக்தா என்று மட்டுமே என் பெயரை மாற்றி விட்டேன்" என்று இதுகுறித்து குறிப்பிட்டார். 

மேலும் சம்யுக்தா பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ.. 

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..

தளபதியின் வெறித்தனமான ஆட்டம் இனி வைரல்.. வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ -  ரசிகர்கள் கொண்டாட்டம்.. துள்ளலானா வீடியோ சாங் இதோ..
சினிமா

தளபதியின் வெறித்தனமான ஆட்டம் இனி வைரல்.. வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ - ரசிகர்கள் கொண்டாட்டம்.. துள்ளலானா வீடியோ சாங் இதோ..

பட்டையை கிளப்பும் வாத்தி பட பாடல்கள்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த Good News.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பட்டையை கிளப்பும் வாத்தி பட பாடல்கள்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த Good News.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..