தனுஷ் ரசிகர்களே தயாரா..? வாத்தி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

தனுஷின் வாத்தி பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு,dhanush in vaathi movie trailer release date announcement | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராகவும் வளர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் தனி முத்திரை பதித்த நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில்(2022) மாறன் தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன.

இந்த வரிசையில் தனது அடுத்த படமாக தற்போது ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து வருகிறார். அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இதனிடையே தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி 8-ம் தேதி வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

The D-mania is about to begin 😎#VaathiTrailer / #SIRTrailer releasing on 𝐅𝐄𝐁 𝟖𝐭𝐡 💥@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #SrikaraStudios pic.twitter.com/BkSyQtoBiI

— Sithara Entertainments (@SitharaEnts) February 6, 2023

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பது குறித்து ஹன்சிகா.. தரமான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. -  திரையுலகினர் நேரில் அஞ்சலி..
சினிமா

நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. - திரையுலகினர் நேரில் அஞ்சலி..

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..