நண்பர் மறைவை கேட்டு பதறி ஓடி வந்த கவுண்டமணி.. நெகிழ்ச்சியில் செந்தில்.. - திரையுலகினர் நேரில் அஞ்சலி..

Tb கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவுண்டமணி - Goundamani pay last respects to tb gajendran | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான T.P.கஜேந்திரன் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். இச்செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது திரை பிரபலங்கள் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் புகழ் பெற்ற காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நேரில் சென்று மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இதில் பத்திரிக்கையாளரை சந்தித்த நடிகர் செந்தில் T.P.கஜேந்திரன் குறித்து, “அவர் நல்ல அருமையான இயக்குனர்,அவர் படங்களில் நான் நடித்திருக்கிறேன். நல்ல மனிதர் அவர்.எல்லோரிடமும் நல்லா பழகுவார். ஊடகம் பத்திரிகை எதிலும் அவரை பற்றி தவறா வந்ததில்லை.அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறினார்.

T.P.கஜேந்திரன் வீடு மனைவி மக்கல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பின் 'பாண்டி நாட்டு தங்கம்', 'எங்க ஊரு மாப்பிள்ளை', 'நல்ல காலம் பொறந்தாச்சு', 'பாசமுள்ள பாண்டியரே' போன்ற பல படங்களை இயக்கினார். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பந்தா பரமசிவம்’ உள்ளிட்ட படங்களின்  காமெடி டிராக்குகள் கதையுடன் ஒன்றி ரசிக்கும் படியும் அனைத்து தரப்பு மக்களும் சிரித்து கொண்டாடும் படாமாக இருக்கும்.

  இவர் தமிழ் நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடைய கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலே அவர் உடல் நலம் சரியில்லாத நேரத்தில் முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார். தற்போது இறந்த செய்தியை கேட்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் அரசியல் பிரமுகர்கள் நடிகர்கள் தம்பி ராமையா, போஸ் வெங்கட், வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவரது இழப்பினை தற்போது திரைபிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்
சினிமா

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..
சினிமா

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்..  Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..
சினிமா

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்.. Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..