இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!

வசந்த பாலன் - அர்ஜுன் தாசின் அநீதி பட டீசர் வெளியீடு,vasanthabalan arjun das in aneethi movie teaser out now | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் இயக்குனர் வசந்தபாலன். 2002 ஆம் ஆண்டு ஆல்பம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய இயக்குனர் வசந்தபாலன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்தார். மனித உணர்வுகளோடு உரையாடிய வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றதோடு தமிழ் மாநில விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இதனை அடுத்து தனது அடுத்த ஆகச்சிறந்த படைப்பாக இயக்குனர் வசந்தபாலன் உருவாக்கிய திரைப்படம் தான் அங்காடித் தெரு. காலம் கடந்தும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்படும் அங்காடி தெரு திரைப்படமும் இயக்குனர் வசந்தபாலன் அவர்களுக்கு எக்கச்சக்கமான விருதுகளை வென்று கொடுத்தது.

இதையடுத்து அட்டகாசமான ஹிஸ்டாரிக்கல் படமாக வசந்தபாலன் இயக்கிய அரவான் திரைப்படம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அடுத்ததாக தனது அடுத்த பீரியட் படமாக இயக்கிய திரைப்படமான காவியத் தலைவன் திரைப்படத்தில் முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோடு கைகோர்த்தார் இயக்குனர் வசந்தபாலன். இசைப்புயலின் இசை மழையில் வெளிவந்த காவியத்தலைவன் திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த வரிசையில் கடைசியாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய திரைப்படம் ஜெயில். கடந்த 2021 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த ஜெயில் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படைப்பாக வெளிவரும் திரைப்படம் தான் அநீதி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மாஸ்டர் திரைப்படங்களில் இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பரணி, ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் M.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G.வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், ரவிக்குமார்.M படத்தொகுப்பு செய்திருக்கும் அநீதி திரைப்படத்தின் வசனங்களை S.K.ஜீவா எழுதியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் அவர்களின் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கொடிகட்டி பறக்கும் ஜீவி பிரகாஷ் குமார் அவர்கள் அநீதி திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் தனது S பிக்சர்ஸ் சார்பில் வழங்கும் அநீதி திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் அநீதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் அநீதி திரைப்படத்தின் மிரட்டலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

‘உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கே!’- மாமன்னன் முக்கிய காட்சியின் கலகலப்பான ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்த வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

‘உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கே!’- மாமன்னன் முக்கிய காட்சியின் கலகலப்பான ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்த வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ

MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married படத்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... அசத்தலான ரிலீஸ் அப்டேட்!
சினிமா

MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married படத்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... அசத்தலான ரிலீஸ் அப்டேட்!

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!
சினிமா

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!