‘உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கே!’- மாமன்னன் முக்கிய காட்சியின் கலகலப்பான ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்த வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ

மாமன்னன் படப்பிடிப்பின் கலகலப்பான தருணங்களை பகிர்ந்த வடிவேலு,vadivelu about working with udhayanidhi stalin in maamannan success meet | Galatta

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வரிசையில் அடுத்த சமூக நீதி திரைப்படமாக இயக்கி வெளிவந்துள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது. வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக ஒன்பது நாட்களில் 52 கோடி வசூலித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய வைகைப்புயல் வடிவேலு மொத்த அரங்கையும் தனது நகைச்சுவையான பேச்சால் சிரிப்பொலியில் அதிர வைத்தார். அப்படி பேசுகையில், 

"ஒரு காட்சியில் சீரியஸ்னஸ் வேண்டும் என்பதற்காக யாரும் சிரித்து விடக்கூடாது என்பதில் இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் கவனமாக இருப்பார். ஆனால் எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருப்பது கேமராமேன் தேனி ஈஸ்வர் தான். இப்போது ஒரு காட்சியில் பார்த்தீர்கள் என்றால்.. அதை இங்கே சொல்லக்கூடாது இருந்தாலும் நான் அனுமதி வாங்கி விட்டேன். பகத் பாஸில் இடம் காரில் துப்பாக்கியை எடுத்து காட்டுகிறேன். அவர் காரில் ஏறுகிறார் நான் துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறேன். பேசிக் கொண்டே இருந்து திடீரென துப்பாக்கி எடுத்துக் காட்டியதும் "ஓ நல்லா செட்டப்போடுதான் வந்திருக்கிறீர்களா?" என்றார். உதயநிதி சார் பண்ற அக்கப்போர் இருக்கும் பார்த்தீறீர்களா? அய்யய்யோ அவர் ஒரு துப்பாக்கி எடுக்கிறார். நான் லேசாக கீழே பார்த்தேன். அங்கே காமெடி மைண்ட் வருகிறது எனக்கு.. ஒரு சிறிய ரியாக்ஷன் போட்டாலும் அந்த சீன் முடிந்தது... நான் நீட்டி இருந்த துப்பாக்கி கீழே வைத்து விட்டேன். உடனே உதயநிதி "ஏம்ப்பா உள்ள குண்டு இல்லையோ?" என்றார். அவர் குண்டு இல்லையோ என சொன்னவுடன் சீன் அவுட் “கட் கட்” என்கிறார் இயக்குனர். எங்களிடம் வந்து “சார் சார் சார் கொஞ்சம் பார்த்து பண்ணுங்கள் உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்” என அழுகிறார். அதன் பிறகு பார்த்தால் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறோம் கதவை மூடிக்கொண்டு.. அப்போது உதயநிதி என்னிடம் சொல்கிறார், “அப்பா கதவை உடைத்து விட்டு உள்ளே வந்து விட்டார்கள் என்றால் பின்னால் ஓடுவதற்கு கதவை திறந்து வைத்திருக்கிறாயா?” என கேட்கிறார். உடனே நானும் "அனேகமாக அம்மா திறந்து வைத்திருப்பாள்.." என்றேன். தொடர்ந்து அவர் "அம்மா தான் உள்ளே கிடக்கிறதே" என்றார். "அப்படியா ரொம்ப முத்திவிட்டது என்றால் அப்படியே கிளம்பிடுவோம் பேசாமல் இரு" என்றேன். “சார் என்ன நடந்துகிட்டு இருக்குது அங்க” இயக்குனர் ஒரே பதட்டமாக கேட்கிறார். "அப்படியே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டால் நாம் பின்பக்கமாக போய் விடலாமா?" என  உதயநிதி கேட்கிறார். அங்கே டேக் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே கூத்து.. இது மாதிரி ஒவ்வொரு இடத்திலும்…"

இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை தன் பாணியில் வைகைப்புயல் வடிவேலு பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின்
சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் "மாமன்னன் கொண்டாட்டம்!"-  இதுவரை பார்த்து தான் அட்டகாசமான புது மேக்கிங் வீடியோ இதோ!

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட வேற லெவல் அப்டேட்... Let's Get Married ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு அறிவிப்பு இதோ!
சினிமா

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட வேற லெவல் அப்டேட்... Let's Get Married ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு அறிவிப்பு இதோ!