'கொண்டாடி கொளுத்த ரெடியாகிகோங்க நண்பா!'- லியோ ஷூட்டிங்கை முடித்த தளபதி விஜய்... வைரலாகும் பக்கா மாஸான புகைப்படங்கள் இதோ!

லியோ ஷூட்டிங்கை முடித்த தளபதி விஜய் வைரல் புகைப்படங்கள்,Thalapathy vijay wrapped his portion for leo movie | Galatta

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தன் பகுதி படப்பிடிப்பை தளபதி விஜய் நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்று தான் லியோ. இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பின. அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் இமாலய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது. எனவே மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு மிகப்பெரிய வெடியாக வெடித்தது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும்லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக விக்ரம் படத்தில் முக்கிய சிறப்பு தோற்றத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தது போல லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிரடி அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் தலைகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்களது காப்புகளை ஒன்றோடு ஒன்று மோதுவது போல குத்தும் வகையில் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டான நிலையில், தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் இருவரும் அதே போல் இருக்கும் மற்றொரு புதிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “தளபதி விஜய் அவர்களின் லியோ படப்பிடிப்பு நிறைவடைந்தது. உங்களோடு இரண்டாவது முறை இணைய வாய்ப்பளித்ததற்கு நன்றி.. மீண்டும் ஸ்பெஷல் அண்ணா” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருவரும் தளபதி விஜயோடு இருக்கும் புகைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “மிஷன் சக்சஸ்ஃபுல்லா முடின்ச்சு.. அக்டோபர்19 கொண்டாடி கொளுத்த ரெடியாகிக்கோங்க நண்பா லியோவின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன அந்த புகைப்படங்கள் இதோ…

 

And it's a wrap for our @actorvijay portion! 🤜🤛
Thank you for making the second outing yet again a special one na! ❤️#Leo 🔥🧊 pic.twitter.com/t0lmM18CVt

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2023

Mission successful ah mudinchu 🔥

Oct 19th kondaadi kolutha ready aagikonga nanba 💣

It’s a shoot wrap for #LEO#Thalapathy @actorvijay sir, @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @7screenstudio @trishtrashers @duttsanjay @akarjunofficial @SonyMusicSouth#LEOShootWrap pic.twitter.com/GyPYXsM4ul

— Seven Screen Studio (@7screenstudio) July 10, 2023

“அசைக்க முடியாத ஆதரவு..”  பிரபாஸின் ‘சலார்’ பட டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

“அசைக்க முடியாத ஆதரவு..” பிரபாஸின் ‘சலார்’ பட டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!

சினிமா

"ரஜினி சாருடன் படம் பண்ண பயமா இருக்கு.." கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - Exclusive Interview இதோ..