MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married படத்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... அசத்தலான ரிலீஸ் அப்டேட்!

MSதோனியின் LGM தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்,Ms dhoni lgm movie tamilnadu release rights bagged by sakthi film factory | Galatta

முதல்முறையாக சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கும் MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (LET'S GET MARRIED) திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாகவும் திகழும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி மக்களை மகிழ்வித்து வரும் “தல” தோனி நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐந்தாவது கோப்பையையும் வெல்வதற்கு கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்தினார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்து தற்போது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையும் வென்றெடுத்த “தல” தோனி சினிமாவிலும் சாதிக்க களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அறிவித்தார்.

அந்த வகையில் இந்த தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ள LGM (Let's Get Married) என்ற தமிழ் படத்தை தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் LGM (Let's Get Married) படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். 
சமீபத்தில் வெளிவந்த LGM திரைப்படத்தின் டீசர் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி தோனி இருவரும் இணைந்து வெளியிட இன்று ஜூலை 10ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இந்த ஜூலை மாத இறுதியில் LGM திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், LGM திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Completely loaded with surplus happiness as we @SakthiFilmFctry associate with @msdhoni @SaakshiSRawat ‘s @DhoniLtd for Tamil Nadu theatrical rights of #LGM 😎

@Ramesharchi @iamharishkalyan @i__ivana_ @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @vp_offl @Actor_Srinathpic.twitter.com/iChQskce36

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) July 9, 2023

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட வேற லெவல் அப்டேட்... Let's Get Married ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு அறிவிப்பு இதோ!
சினிமா

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட வேற லெவல் அப்டேட்... Let's Get Married ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு அறிவிப்பு இதோ!

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ