அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட லேடி லக் வீடியோ பாடல்,Anushka in miss shetty mr polishetty movie lady luck video song out now | Galatta

தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக அட்டகாசமான படங்களில் நடித்து வந்த நடிகை அனுஷ்கா நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் லேடி லக் எனும் வீடியோ பாடல் வெளியானது.  கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த சூப்பர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து வரிசையாக சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை அனுஷ்கா தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகியாக உயர்ந்தார் அனுஷ்கா.

வெறும் ஹீரோயினாக மட்டுமல்லாமல் கதாநாயகிகளை முன்னிறுத்தும் சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக திகழ்ந்த அனுஷ்காவின் திரை பயணத்தில் மைல்கல்லாக பக்கா ஆக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்த அருந்ததி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மெகா ஹிட் பிளாக்பஸ்டராகிய அருந்ததி படம் போலவே பஞ்சாக்ஷ்ரி, சந்திரமுகியின் தெலுங்கு வெர்ஷனாக நாகவல்லி, ருத்ர மாதேவி ஆகிய படங்களில் வரிசையாக நடித்த அனுஷ்கா, மறுபுறம் தமிழில் தளபதி விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1,2&3 , சீயான் விக்ரமுடன் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, அஜித் குமார் உடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் தொடர்ந்து நடித்து வந்தார். 

குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக கொண்டாடப்படும் பாகுபலி 1&2 திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த அனுஷ்கா கடைசியாக நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. இதனைத் தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது.  அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அனுஷ்காவின் புதிய திரைப்படமான தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது திரைக்கு வர தயாராகி வரும் இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் தனது திரைப்பயணத்தில் 48வது படமாகும். இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

UV CREATIONS மற்றும் STUDIO GREEN ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க பக்கா கமெடி என்டர்டெய்னராக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் திரைப்படத்திலிருந்து லேடி லக் எனும் பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அட்டகாசமான அந்த வீடியோ பாடல் இதோ…
 

MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married படத்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... அசத்தலான ரிலீஸ் அப்டேட்!
சினிமா

MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married படத்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... அசத்தலான ரிலீஸ் அப்டேட்!

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!
சினிமா

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின்
சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் "மாமன்னன் கொண்டாட்டம்!"-  இதுவரை பார்த்து தான் அட்டகாசமான புது மேக்கிங் வீடியோ இதோ!