இசையமைப்பாளராக 100வது படம்.. பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜிவி பிரகாஷ் - வைரல் வீடியோ உள்ளே..

100 வது படம் சுதா கொங்கராவுடன் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்த தகவல் - Gv Prakash kumar 100th film with Director sudha kongara | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். வெயில் படத்தில் தொடங்கி இன்று ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இன்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் பணியாற்றி வருகிறார்.  தற்போது ஜிவி பிரகாஷ் குமார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ சியான் விக்ரமின் ‘தங்கலான்’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘வாடிவாசல்’, கார்த்தியின் ‘ஜப்பான்’, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ , அருண் விஜயின் ‘மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே’ மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன.

இசையமைப்பாளராக எந்தளவு பிஸியாக திரைத்துறையில் இயங்கி வருகிறாரோ அதே அளவு நடிகராகவும் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். ‘இடி முழக்கம்’, ‘கள்வன்’, ‘13’,’டியர்’, ‘அடியே’, ‘ரெபெல்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ஜூலை 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘அநீதி’ பட  இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அநீதி திரைப்படம் குறித்து பேசினார். அதனுடன் அவர் இசையில் 100 வது படமாக உருவாகவுள்ள படம் குறித்தும் பேசியுள்ளார். விழாவில் ஜிவி பிரகாஷ் குமார் பேசியதாவது,

"2006 ல ஷங்கர் சார் தயாரிப்பில் வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். வசந்த பாலன் சார்தான் அடம்பிடிச்சு என்னை அந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக்கினார். அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.  அந்த நேரத்தில் விளம்பர படங்கள் நிறைய பண்ணிட்டு இருந்தேன். 17 வயசு தான் இருந்தது. அப்போவே அவரிடம் நிறைய பேர் அவன் சின்ன பையன்.. னு சொன்னாங்க. அப்ப கூட வசந்த பாலன் சார் எனக்காக நின்னார். அதற்கு ஷங்கர் சாரும் அந்த வாய்ப்பை கொடுத்தார். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு அவரிடம் முதல் பணத்தொகை வாங்குனது.  1993 ல ஷங்கர் சார் முதல் படத்துல பாடகரா பாடுனேன். அங்கிருந்து அந்நியன் படத்துலையும் பாடுனேன். அப்பறம் வெயில்..  எதோ ஒரு வகையில் அவரோட பயணிச்சுட்டு வந்திருக்கேன். எல்லா படமும் வெற்றி படமாகவே அமைந்தது.

முதல் படம் நம்பி கொடுத்தது எளிதான காரியமல்ல. அதற்கு நன்றி நான் உங்களுக்கு எப்போதும் கடமை பட்டுள்ளேன். கிட்டத்தட்ட 100 படம் நெருங்கிட்டேன். அடுத்தாண்டு எனது 100 வது படம் இயக்குனர் சுதா கொங்காராவுடன்..அடுத்த வருஷம் அதுகுறித்து அறிவிப்பு வரும்.” என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.  மேலும் அதை தொடர்ந்து “வசந்த பாலன் சார் மிகச்சிறந்த இயக்குனர். உலகத்தரத்தில் தமிழ் சினிமாவை கொண்டு சேர்க்க கூடிய திறன் கொண்ட இயக்குனர்.  வெயில் படமே பல உலக மேடைகள் ஏறுச்சு.. அவர் கூட சேர்ந்து வேலை செய்ற பாக்யம் கிடைத்தது.” என்றார் ஜிவி பிரகாஷ் குமார்

சூரரை படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் புத்தம் புது காலை இணைய தொடர், சூரரை போற்று இந்தி ரெமேக் ஆகிய படங்களில் கூட்டணி அமைத்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது அவருடைய இசையில்  100 வது படமாக சுதா கொங்கராவுடன் அமையவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். சூரரை போற்று இந்தி ரீமேக்கை முடித்து விட்டு இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவுடன் பணியாற்றவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. அதன்படி சூரரை போற்று பட வெற்றி கூட்டணி விரைவில் உருவாக வாய்ப்புள்ளது என்பது எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் அநீதி பட இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!

சினிமா

"ரஜினி சாருடன் படம் பண்ண பயமா இருக்கு.." கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - Exclusive Interview இதோ..

சினிமா

"தளபதி 68 தான் விஜயின் கடைசி படமா?"- சோசியல் மீடியாவில் பரவும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஜெயனின் பதில் இதோ!