“லோகேஷ் சொன்னதை வெச்சு தான் மாவீரன் படம் பண்ண போனேன்..” சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்.. – முழு வீடியோ உள்ளே..

மாவீரன் விழாவில் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்  வீடியோ வைரல் - Sivakarthikeyan about lokesh kanagaraj at maaveeran meet | Galatta

ரசிகர்களின் ஆதரவை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாகவும் டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு, மோனிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷாந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் வரவேற்பை ஏற்று டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிரது. மேலும் முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. ரசிகர்களின் மிகுந்த ஆவலுடன் வரும் ஜூலை 14ம் தேதி உலகமெங்கும் மாவீரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதே நாளில் தெலுங்கில் ‘மகாவீரடு’ என்ற பெயரில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்  மாவீரன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மாவீரன் பட நாயகன் சிவகார்த்திகேயன்,

"மாவீரன் படத்தை பொறுத்தவரை எனக்கு மிகுந்த ஆவலாக உள்ளது. மடோன் அஷ்வின் உடைய 'மண்டேலா' எனக்கு பிடிச்சது. மடோன் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் அவருடைய திரைப்படங்களில் நல்ல சமூக பார்வை உள்ளது. அதை மக்களுக்கு ஜனரஞ்சகமா மக்களிடம் கொடுக்கிறார். அதே போல் தான் இந்த மாவீரன் படம். சமூக அக்கறை இருக்கும் அதை திணிக்காமல் எளிமையாக சொல்லிருப்பார். அது மக்களிடம் போய் சேரும்.

லோகேஷ் கனகராஜ் மடோனுக்கு ரொம்ப நெருக்கம். லோகேஷ் பார்க்கும் போது ஒருமுறை சொன்னார். 'நான் லாஸ்ட் பெஞ்ச் மாணவன். நான் எப்படியோ ஒரு படம் பண்ணிடுவேன். மடோன்  முதல் பெஞ்ச் மாணவன்.  அவன் ரொம்ப தெளிவா படம் பண்ணுவான்' ன்னு சொன்னார். அதை மனதில் வெச்சு தான் நான் படப்பிடிப்பிற்கு போனேன். அங்க போனாதான் தெரியுது அவர் முதல் பெஞ்ச் மாணவன் லாம் இல்ல.. அவர் தலைமை ஆசிரியர் என்று.. யாரையும் திட்ட மாட்டார்.. ஆனா எல்லோருக்கிட்டையும் வேலையை வாங்கிடுவார்..  படப்பிடிப்புல ஒரு காட்சியில் ஒன்மோர் கேட்டுட்டே இருந்தார்‌. அப்பறம் ஏன் இப்படினு யோசிச்சேன். அதன்பின் எனக்கு தெரிஞ்சதையெல்லாம் விட்டு மடோன் என்ன யோசிக்கிறாருனு புரிஞ்சு பண்ணேன். அவர் என்ன சொல்றாரோ அதைதான் பண்ணேன். டாக்டர் படத்தில என்ன எப்படி வித்யாசமா பார்த்தீங்களோ அதே மாதிரி மாவீரன் படத்துலையும் என்னை வித்யாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம்." என்றார் சிவகார்த்திகேயன்.

மேலும் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

‘லியோ’ படத்திற்கு பின் முன்னணி நடிகருடன் நடிக்கும் நடிகை த்ரிஷா.! - அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..
சினிமா

‘லியோ’ படத்திற்கு பின் முன்னணி நடிகருடன் நடிக்கும் நடிகை த்ரிஷா.! - அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

“அசைக்க முடியாத ஆதரவு..”  பிரபாஸின் ‘சலார்’ பட டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

“அசைக்க முடியாத ஆதரவு..” பிரபாஸின் ‘சலார்’ பட டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... கவனத்தை ஈர்க்கும் “வா வீரா” பாடல் இதோ!