தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்துடன் இணைந்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான அறிவிப்பு இதோ!

லியோ பட சிங்கப்பூர் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ஹோம்ஸ்க்ரீன் என்டர்டென்மென்ட்,singapore release rights bagged by home screen entertainment | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் சிங்கப்பூர் ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி விஜய் -  யுவன் சங்கர் ராஜா கூட்டணி தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது போக முக்கிய சிறப்பு தோற்றத்தில் விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தது போல லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் தலைகோணம் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிரடி அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. PAN INDIA திரைப்படமாக ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்தை வெளிநாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெறுவதாக தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிங்கப்பூரில் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை ஹூம் ஸ்க்ரீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

"SINGA"pore, here we come! 🦁💥

We are super excited to be releasing #Leo in Singapore!

Ready to Roar! 🔥 @actorvijay @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay #LeoFilm #ThalapathyVijay #LokeshKanagaraj #AnirudhRavichander #BloodySweet #NaaReady pic.twitter.com/PXAu7XmBbx

— Home Screen Entertainment (@homescreenent) July 10, 2023

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!
சினிமா

சிவகார்த்திகேயனின் அதிரடியான பாலிவுட் என்ட்ரி... மாவீரன் பட ப்ரீ-ரிலீஸ் விழாவில் சர்ப்ரைஸை உடைத்த நடிகர் அத்வி ஸேஷ்!

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின்
சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் "மாமன்னன் கொண்டாட்டம்!"-  இதுவரை பார்த்து தான் அட்டகாசமான புது மேக்கிங் வீடியோ இதோ!

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!