தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வசந்தபாலன் தனது 2-வது படமான வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்தார். மேலும் வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. தொடர்ந்து அரவான், காவியத்தலைவன் என குறிப்பிடப்படும் படைப்புகளை கொடுத்த இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக GV.பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் கடந்த ஆண்டு (2021) வெளிவந்தது.

அடுத்ததாக கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள அநீதி திரைப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வெயில் திரைப்படத்தில் நடித்த பரத் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் பரத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் பரத்தின் அந்த பதிவு இதோ…
 

How it all started way back in 2006 wen this magic creator created an epic classic “Veyil” and here again I’m super happy to be collaborating with this genius #vasanthabalan as his main man for my upcoming next .. More updates soon !! #kollywood #directoractor pic.twitter.com/MRbF9Gb6BF

— bharath niwas (@bharathhere) September 17, 2022