தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிலம்பரசன்.TR.

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களின் போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த மேக்கிங் வீடியோ இதோ… 
 

 

View this post on Instagram

A post shared by G.Venket Ram (@venketramg)

 

View this post on Instagram

A post shared by G.Venket Ram (@venketramg)