தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் முதல்முறை நடிகராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாக்கி இன்று (டிசம்பர் 23ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது ராக்கி திரைப்படம். RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து வெளியிட்டனர்.

நடிகர் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள, ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான ராக்கி திரைப்படம் இன்று (டிசம்பர் 23ஆம் தேதி) ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ராக்கி திரைப்படத்திலிருந்து எமோஷ்னலான புதிய SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. அந்த SNEAK PEEK வீடியோ இதோ…