இந்திய திரைத்துறையின் ஈடு இணையற்ற கலைஞரும், மிக சிறந்த நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதே மோகத்தோடும் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் வகையில் சிறந்த திரைப்படங்களை வழங்கி வருகிறார். அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலொமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.  அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகிவரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக தொடர்ந்து முழுவீச்சில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக வெளியான விக்ரம் தி ஃபர்ஸ்ட் கிளான்ஸ் டீசர் வீடியோ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங்  ஸ்பாட் புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” #ACTION விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து…” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் அந்த புகைப்படம் இதோ…