ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் சமூகப் பரவல் குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

omicron

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து இந்தியாவில் இதுவரை 200-க்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. ​​மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு உறுதியாகி நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவல் அதிகம் என்று கூறப்பட்டாலும் மற்றொரு மாறுபாடு தற்போது பரவத் தொடங்கி உள்ளது. அது தான் டெல்மிக்ரான்.

டெல்மிக்ரான் என்றால் என்ன? டெல்மிக்ரான் (Delmicron) என்பது கொரோனாவின் இரட்டை மாறுபாடு ஆகும். இது மேற்கு நாடுகளில் அதிகளவில் பரவுகிறது. தற்போது இந்த இரண்டு வகைகளும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் காணப்படுவதால் கொரோனாவின் டெல்டா மாறுபாடு மற்றும் ஒமிக்ரான் மாறுபாடு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இந்த பெயர் பெறப்பட்டது.

இந்நிலையில் கோவிட் பணிக்குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஷி இதுகுறித்து பேசிய போது டெல்டா மற்றும் ஒமிக்ரானின் இரட்டை கூர்முனைகளான டெல்மிக்ரான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு அதிக பாதிப்புக்கு வழிவகுத்தது. தற்போது ​​டெல்டாவின் வழித்தோன்றல்களான டெல்டா டெரிவேடிவ்கள் (Delta derivatives ) இந்தியாவில் புழக்கத்தில் உள்ள முக்கிய வகைகளாக உள்ளன. உலகின் பிற பகுதிகளில் டெல்டாவுக்கு பதிலாக ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது. ஆனால் டெல்டா டெரிவேடிவ் மற்றும் ஒமிக்ரான் எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்க வழி இல்லை என்று அவர்தெரிவித்தார்.

ஒமிக்ரான் மாறுபாடு மற்றும் அறிகுறிகள்: ஒமிக்ரான் மற்றும் அதன் தீவிரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி இன்னும் நடைபெற்று வருகிறது.. நோயாளிகளில் இருமல், சோர்வு, சளி ஒழுகுதல், தசை அல்லது உடல் வலி, தலைவலி, தொண்டை வலி, குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளும் பொதுவானவை. ஒமிக்ரான் மாறுபாடு மற்றும் சிகிச்சை: ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு நேர்மறை சோதனை செய்த கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தனது சிகிச்சை மற்றும் குணமடைந்தது பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒமிக்ரான் வகைக்கு என தனி சிகிச்சை எதுவும் இல்லை. வைட்டமின்-சி மாத்திரைகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகள் கொடுக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

ஒமிக்ரான் பாதிப்பின் அதிகரிப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களை நன்கு கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.