“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..

ரஜினிகாந்த் குறித்து நடிகர் வசந்த் ரவி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - Actor vasanth Ravi about superstar rajinikanth | Galatta

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய ‘ஜெயிலர்’. இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் மிக முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் மற்றும் தமன்னா உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது போக இந்த நட்சத்திர பட்டாளத்துடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளார் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய  நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் ஜெயிலர் பட நடிகர் வசந்த் ரவி கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் அஸ்வின்ஸ் படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில்,

“ரஜினி சார் நடிக்குறதுக்கு முன்னாடி நெல்சன் சார் வசனம் கொடுத்துடுவார்.  அந்த வசனத்தை ரஜினி சார் அவருக்குள்ள திரும்ப திரும்ப சொல்லிட்டே இருப்பார். அந்த நேரம் அவருடன் நடிக்கும் காட்சி இல்லை. அப்போ அந்த இடத்துல அவரை நான் பார்க்குறேன். அவர் அவ்ளோ படம் பண்ணாலுமே அந்த காட்சிக்கு முன்னாடி அவர் அந்த கதாபாத்திரத்திற்குள்ள போறாரு..  அதுக்கு முன்னாடி அவர் ரொம்ப கேஷுவலா இருப்பார். ஒரு ரிஷி மாதிரி அமைதியா இருப்பார். திரும்பவும் நடிக்க வந்ததும் அந்த கதாபாத்திரமா மாறிடுவார்.

அவரை பார்த்தால் மட்டுமே நிறைய கத்துக்கலாம். அவரை யார் என்ன வேணா சொல்லலாம். ஆனா என்னை பொறுத்தவரை ரியாலிஸ்டிக் ஆக்டர் அவர்தான். கமர்ஷியல் சினிமாவிலே மக்களை ஏற்புடையதா வெச்சு நடிக்குறவர் அவர்..” என்றார் வசந்த் ரவி.

மேலும் தொடர்ந்து வசந்த் ரவி, “நான் வசனம் பேப்பர் கொடுத்ததும் அதுலே மூழ்கிடுவேன்.. ராம் சார் வகையில் திரைத்துறைக்கு வந்ததால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிய வர மாட்டேன். அப்போ ரஜினி சார் இது பத்தி கேட்க நானும் சொன்னேன். அவர் நல்லது நல்ல விஷயம் என்றார்.” என்று குறிப்பிட்டு பேசினார் வசந்த் ரவி.

மேலும் நடிகர் வசந்த் ரவி அவர்கள் ஜெயிலர் படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..  

“எனக்கு 6 மாசத்துக்கு பட வாய்ப்பு வரல..
சினிமா

“எனக்கு 6 மாசத்துக்கு பட வாய்ப்பு வரல.." முதல் முறையாக உடைந்த கீர்த்தி சுரேஷ்..- Exclusive Interview உள்ளே..

இந்த வாரத்தின் தியேட்டர், ஒடிடி ரிலீஸ்..! ரசிகர்களின் எதிர்பார்புகளை எகிற வைத்த அசத்தலான படங்களின் பட்டியல் இதோ..
சினிமா

இந்த வாரத்தின் தியேட்டர், ஒடிடி ரிலீஸ்..! ரசிகர்களின் எதிர்பார்புகளை எகிற வைத்த அசத்தலான படங்களின் பட்டியல் இதோ..

சினிமா

"ஆரம்பத்திலிருந்தே என்னை ஒதுக்கி வெச்சு பார்த்தாங்க.." மனம் திறந்து பேசிய விக்ரம் பிரபு – Exclusive Interview உள்ளே..