"ஆரம்பத்திலிருந்தே என்னை ஒதுக்கி வெச்சு பார்த்தாங்க.." மனம் திறந்து பேசிய விக்ரம் பிரபு – Exclusive Interview உள்ளே..

தன் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து மனம் திறந்த விக்ரம் பிரபு வீடியோ உள்ளே - Vikram prabhu about his film entry | Galatta

திரையுலகில் காலங்களால் மறக்க முடியாத தலை சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன் அவரது மகனும் பிரபல நடிகருமான பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. இளமை துள்ளும் நடிப்புடன் கடந்த 2012 ல் வெளியான கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலே சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி திரையுலகில் கவனம் பெற்ற விக்ரம் பிரபுவிற்கு தொடர்ந்து பல பட வாய்புகள் குவிந்தது, அதன்படி இவன் வேற மாதிரி, சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களில் நடித்து திரையுலகில் குறிப்பிடத்தக்க முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாணாக்காரன் திரைப்படம் விமர்சனா ரீதியாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விக்ரம் பிரபு. இவர் தற்போது ரைடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் ஜூன் 23 ம் தேதி வெளியாகவுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு” என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பாயும் ஒளி நீ எனக்கு பட  இயக்குனர் கார்த்திக் அத்வைத் உடன் நடிகர் விக்ரம் பிரபு கலந்து  கொண்டு அப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டியில் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்டு திரைத்துறையில் வரும்போது தான் சந்தித்த விஷயங்கள் குறித்து அவர் பேசியது,

"நானேதான் எல்லா வாய்ப்புகளையும் தேடிக்கிட்டேன். நானே எல்லா இயக்குனரையும் பார்த்து வாய்ப்பு கேட்டு வந்தேன். நான் திரைத்துறைக்கு வரும் போது அழுத்தமும் பொறுப்போடு தான் வந்தேன். அது எல்லாம் கும்கி படம் ரிலீஸ் ஆன பின்பு தான் தெரிய வந்தது. இதெல்லாம் எவ்ளோ பெரிய பாரமா இருக்கும்னு புரிஞ்சிது..இருந்தாலும் அதுவும் ஒரு கடமையா இருந்தது னு நினைச்சேன். தாத்தா, அப்பா எல்லோரும் சொல்ற விஷயம் நல்லது பண்ணனும். அதன்படி நான் பன்ற படம் என் மனசுக்கு பிடிச்சு பன்றேன். சினிமாவிற்கு வர முன்னாடி இருந்தே தாத்தா , அப்பா புகழ் என் பின்னாடியே வந்துச்சு.. “ என்றார் விக்ரம் பிரபு. மேலும் தொடர்ந்து “பள்ளிக்கூடத்திலும் ஒரு எதிர்பார்ப்பு என் மீது இருந்தது. எப்பவும் தனியா பார்க்குறது. தனித்துவமா நான் விக்ரம் மட்டும் தான் என்று எப்பவும் யாரும் பார்த்ததில்லை. இந்த மாதிரி விஷயங்களோட தான் பார்த்திருக்காங்க. இது சின்ன வயசுலருந்தே இருக்கு.‌ இப்படி தான் இருக்கும்னு நினைச்சு நானும் வளர்ந்திட்டேன்.தொழில் ரீதியா நானும் அவங்க துறைக்கு உள்ள வரும்போது நிறைய மாறுதல்களை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் பிரபலம் என்ற வகையில் என்னை ஒதுக்கி வெச்சி பார்ப்பாங்க..  சின்ன வயசுல அது பெருசா தெரியல.. தொழில் ரீதியா வரும்போது அது ரொம்பவே தெரிஞ்சிது..” என்று கூறினார்.

மேலும் விக்ரம் பிரபு அவர்கள் தன் திரைப்பயணத்தில் சந்தித்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்..  வைரலாகும் வீடியோ உள்ளே.
சினிமா

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்.. வைரலாகும் வீடியோ உள்ளே.

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!

இறுதிகட்டத்தை எட்டிய ஜெயம் ரவியின் இறைவன்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! – உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ஜெயம் ரவியின் இறைவன்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! – உற்சாகத்தில் ரசிகர்கள்..