நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பண மோசடி.. பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!

பண மோசடி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தன்னா - Rashmika mandanna Clarifying rumors on her manager | Galatta

இந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தற்போது ராஷ்மிகா வலம் வருகிறார். கடந்த 2021 ல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழிலும் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார் ராஷ்மிகா. பின் தொடர்ந்து தமிழில் இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2021 ல் வெளியான புஷ்பா படத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பிரபலமடைந்துள்ளார். தற்போது ராஷ்மிகா மந்தனா இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மத்தியில் உருவாகும் இப்படம் ராஷ்மிகா மந்தானாவின் பாலிவுட் பயணத்தில் முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதை தொடர்ந்து ராஷ்மிகா அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா தி ரூல்’ படத்தில் நடிக்கவுள்ளார். பின் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் ‘ரெயின்போ’ படத்திலும் நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து இந்திய அளவில் ரசிகர்களை தன் நடிப்பினால் கவர்ந்து மனம் கவர்ந்த நாயகியாக தற்போது வளர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ராஷ்மிகா விடம் இருந்து அவரது மேலாளர் ரூ 80 லட்சம் ரூபாய் பண மோசடி செய்துள்ளார் என்றும் அதனால் ராஷ்மிகா அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளார் என்றும் செய்தி பரவியது. நீண்ட வருடங்களாக மேலாளராக இருந்து வருபவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது இணையத்தில் பேசுபொருளாக அமைந்தது. இந்த செய்தி குறித்து ராஷ்மிகாவிடம் இருந்தும் அவரது முன்னாள் மேலாளரிடம் இருந்தும் எந்தவொரு விளக்கமும் வெளிவரமால் இருந்தது.

actress keerthy suresh expresses insecurity regarding her film chances maamannan

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராஷ்மிகா மற்றும் அவரது மேலாளர் இருவரும் தங்களுக்கு இடையே எந்தவொரு விரோதமும் இல்லை. மேலாளர் ராஷ்மிகாவிடம் இருந்து வெளியேறியது தொடர்பாக பரவி வந்த வதந்திகள் அனைத்தும் பொய்யானது.  பரஸ்பர உடன்பாட்டின் மூலமே இருவரும் பிரிந்துள்ளனர். என்று பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளனர்.  தற்போது இந்த தகவல்களை ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சினிமா

"ஆரம்பத்திலிருந்தே என்னை ஒதுக்கி வெச்சு பார்த்தாங்க.." மனம் திறந்து பேசிய விக்ரம் பிரபு – Exclusive Interview உள்ளே..

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!
சினிமா

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..