“மாரி செல்வராஜ் செட் இப்படி தான் இருக்கும்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் – Exclusive Interview உள்ளே..

மாரி செல்வராஜ் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல் - Keerthy suresh about mari selvaraj | Galatta

தமிழ் சினிமாவிலிருந்து இந்த மாதம் உலகங்கெங்கிலும் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாமன்னன். பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ‘வைகை புயல்’ வடிவேலு மற்றும் பகத் பாசில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய RK செல்வராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிரெண்ட்டிங் கில் இருந்து வருகிறது. சமூக கருத்துக்களை உள்ளடக்கி உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் வரவிருக்கும் மாமன்னன் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் மாரி செல்வராஜின் படப்பிடிப்பு தள அனுபவம் குறித்து பேசுகையில்,

“மாரி செல்வராஜ் படப்பிடிப்பு சூழல் இப்படி இருக்காது. அவர் செட் எப்போதும் பரபரப்பாகவும் சீரியஸாகவும் தான் இருக்குமாம்.  ஆனா வடிவேலு சாரும் உதய் சாரும் கலாய்ச்சு அதை லைட் ஆக்கிட்டாங்க. நான் வந்த 2,3 நாளில் ஒழுக்கமா இருந்தேன். அமைதியா.. அதுக்கப்புறம் நானும் அவங்க கூட சேர்ந்து ஜாலியா இருந்தேன். அப்பறம் மாரி சார் வந்து, "நீங்களாவது வந்தப்போ நல்லாருந்தீங்க.. நீங்களும் அவங்க கூட கூட்டு சேர்ந்துட்டீங்க." னு சொல்வார். நல்லாருக்கும் அந்த படம். இந்த படத்துக்கும் படப்பிடிப்புக்கும் நிறைய சம்மதமே இருக்காது..  என்றார் கீர்த்தி சுரேஷ். மேலும் மாமன்னன் திரைப்படம் உருவாகியிருக்கும் நிலை குறித்து கேட்கையில்,

“படம் முடிச்சதும் நான் படத்தை‌ பார்த்தேன். இந்த படம் அர்த்தமுள்ள கருத்துள்ள படம். இது ஒரு சீரியஸானா படம். நம்மை ஒரு இடத்திற்கு கொண்டு போகும். அதற்கு தயாராக இருக்க வேண்டும். இருந்தாலும் படத்தில் ஒரு சமூக கருத்து இருக்கு.  இதுல நிறைய நல்ல நல்ல கதாபாத்திரம் இருக்கும். வடிவேலு சார் நடிப்பு நமக்கு விருந்தாக இருக்கும். அவர் இந்த மாதிரி படம் பண்ணனும் னு ஆசையா இருக்கு..”  என்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலில் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..

 

இந்த வாரத்தின் தியேட்டர், ஒடிடி ரிலீஸ்..! ரசிகர்களின் எதிர்பார்புகளை எகிற வைத்த அசத்தலான படங்களின் பட்டியல் இதோ..
சினிமா

இந்த வாரத்தின் தியேட்டர், ஒடிடி ரிலீஸ்..! ரசிகர்களின் எதிர்பார்புகளை எகிற வைத்த அசத்தலான படங்களின் பட்டியல் இதோ..

சினிமா

"ஆரம்பத்திலிருந்தே என்னை ஒதுக்கி வெச்சு பார்த்தாங்க.." மனம் திறந்து பேசிய விக்ரம் பிரபு – Exclusive Interview உள்ளே..

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!
சினிமா

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!