‘அவர் MINDல ஒன்னு செட் ஆயிடுச்சு!’ லியோ முடிவதற்கு முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்தது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்! வீடியோ இதோ

லியோ முடியும் முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்த காரணம்,Why thalapathy 68 movie announced before the end of leo | Galatta

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ படம் ரிலீஸாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 68 வது படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “முன்னதாக தளபதி விஜய்யின் ஒரு படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தான் அடுத்த படத்திற்கான முதல் அறிவிப்பு வெளிவரும் ஆனால் இந்த முறை லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்திற்கான அறிவிப்பு வந்திருக்கிறது… இதற்கான காரணம் என்ன?” என கேட்டபோது, “அவர் (விஜய்) மிகவும் தெளிவாக இருக்கிறார். அதாவது ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக என்னுடைய ஒரு படமாவது ரிலீஸாக வேண்டும். முடிந்தவரை இரண்டு படங்கள் வெளிவர வேண்டும். ஃப்ரீயாக இருக்கவே கூடாது தொடர்ந்து பிஸியாக இருக்க வேண்டும். என்பதில் விஜய் சார் மிகவும் தெளிவாக இருக்கிறார்” என பதில் அளித்தார். 

மேலும் அவரிடம், “அவர் தொடர்ந்து கதை கேட்டுக் கொண்டே இருக்கிறாரா?” எனக் கேட்டபோது, “இல்லை அவர் கதை எல்லாம் கேட்டுக் கொண்டு இல்லை.. அவர் தனது இயக்குனர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கிறார். யார் நம்முடைய அடுத்த இயக்குனர் எப்படி பயணிக்கலாம். தன்னுடைய கரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லக்கூடிய இயக்குனர் யாராக இருப்பார்கள். யார் நமக்காக கதை வைத்திருக்கிறார்கள். என அவருக்கென ஒரு பட்டியல் இருக்கும் அதில் 10-15 பேர் இருக்க மாட்டார்கள் ஒரு 4-5 பேர் இருப்பார்கள். அந்த 4-5 பேர்களில் யார் நமக்காக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இவராக தேடிக் கேட்க முடியாது. அவர்களாக நம்மிடம் கதையோடு வருகிறார்களா? இதெல்லாம் செய்து கொண்டே இருப்பார்.  ஜெகதீஷ் (அவரது மேலாளர்) அவர்களும் தொடர்ந்து இதை செய்து கொண்டே இருப்பார். யார் கண்டிப்பாக வணிக ரீதியில் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியும். இதெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்த கதையை அவர்(வெங்கட் பிரபு) இப்போது சொல்லவில்லை 9-10 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். அப்போதே விஜய் சார் நாம் இதை பண்ணுவோம் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அவர் பெரிதாக யாரையும் சந்திக்கவில்லை. என்ன காரணம் என்றால் அவருடைய மைண்டில் ஒன்று செட் ஆகிவிட்டது என்றால், சரி அவரோடு பயணம் செய்வோம் காத்திருப்போம்... இப்போது சரியாக லியோ படம் முடிய இருக்கிறது. அடுத்த படத்திற்கு எல்லோரும் அணுகுகிறார்கள். இந்த தருணத்தில் அவர் முடிவு எடுத்தாக வேண்டும். இல்லையென்றால் அது ஒரு பெண்டிங்காக இருந்து கொண்டிருக்கும் அல்லவா? எனவே சரி அறிவித்து விடலாம்… இப்போது அந்த மேட்டர் ஓவர்… அந்த இயக்குனர் அதற்காக தயாராகிக் கொண்டிருப்பார் நாம் இந்த படப்பிடிப்பு முடியும் போது அந்த படத்தோட படப்பிடிப்பிற்கு போய்விடலாம்.” என தெரிவித்தார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட தனஞ்செயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.
 

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட
சினிமா

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட "நா ரெடி" பாடல் இதோ!

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!
சினிமா

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!