“எனக்கு 6 மாசத்துக்கு பட வாய்ப்பு வரல.." முதல் முறையாக உடைந்த கீர்த்தி சுரேஷ்..- Exclusive Interview உள்ளே..

திரைப்பட வாய்புகள் குறித்து கீர்த்தி சுரேஷ் முழு வீடியோ உள்ளே - Actress keerthy suresh about her insecurity | Galatta

தென்னிந்திய ரசிகர்களை தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ஈர்த்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் அதே நேரத்தில் கதாநாயாகி மையப்படுத்தி எடுக்கப் படும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தசரா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் வேதாளம் பட ரேமேக்கில் சிரஞ்சீவி நடித்து வரும் ‘போலா ஷங்கர்’ படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் சைரன் படத்தில் நடிக்கிறார். மேலும் கதாநாயகி மையப்படுத்தி தமிழில் உருவாகும் ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 29 ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில்  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் வரவிருக்கும் மாமன்னன் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கீர்த்தி சுரேஷ் திரைப்பயணத்தில் நேர்ந்த தாழ்வு மனப்பான்மை குறித்து பேசுகையில்.

"சில நேரங்களில் நான் தாழ்வு மனப்பான்மை அதிகம் வரும். அதிலிருந்து மீண்டு வரவும் முடிந்தது. மகாநதி படத்திற்கு பிறகு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல பெயரும் கிடைத்தது. அதன்பிறகு 6 மாதத்திற்கு எனக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கல.. 

நான் அப்பொல்லாம் வந்துடும் வந்துடும் னு நினைச்சேன். ஆனா வரல..  'மகாநநி' படத்திற்கு பிறகு நம்ம என்ன பண்ணலாம் னு யோசிச்சேன். நான் ஒண்ணு நினைச்சா நமக்கு வர பட வாய்ப்பு வேற மாதிரி இருக்கும். எனக்கு கமர்ஷியல் படம் நடிக்கனும் னு விரும்புனேன். ஆனால் எனக்கு வரது எல்லாம் கதாநாயகி மையப்படுத்தி வர படங்களாக தான் வந்தது.

கமர்ஷியல் படம் பண்ணனும் னு ஒரு 3,4 மாதத்திற்கு நான் இது போல படங்களை ஏத்துக்கவே இல்ல.. ஒரு கட்டத்தில் பார்த்தால் எனக்கு பொருளாதார ரீதியாகவும் தேவை இருக்கு.  அதனால் அது போன்ற கதாநாயகி மையப்படுத்தி வரும் படங்களையும் நடிக்க தொடங்கினேன்.

அந்த படங்களையும் குறிப்பா தேர்ந்தெடுத்தேன்.  அப்போதான் எனக்கு இந்த தாழ்வு மனப்பான்மை வர தொடங்கியது. கொஞ்சம் நேரம் கழிச்சு நான் நினைச்ச படங்கள் வந்தது." என்றார் கீர்த்தி சுரேஷ்.

 

மேலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலில் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!
சினிமா

'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்..  வைரலாகும் வீடியோ உள்ளே.
சினிமா

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்.. வைரலாகும் வீடியோ உள்ளே.