‘தேள் கொடுக்கு சிங்கத்த தீண்டாதப்பா... இது லியோ VS ரோலக்ஸ் தானா?’ உண்மையை உடைத்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

லியோ பட நா ரெடி பாடலில் தேள் பற்றிய விளக்கத்தை தெரிவித்த விஷ்ணு எடவன்,leo movie naa ready lyricist vishnu edavan about rolex and lcu | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாள் தினத்தன்று செம்ம ட்ரீட்டாக வெளிவந்த "நா ரெடி" பாடல் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலில் வரும் "தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா" என்ற வரி விக்ரம் படத்தில் இடம் பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறதா என்ற கேள்விக்கு பாடலாசிரியர் விஷ்ணு எடவன் தற்போது பதிலளித்து இருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்த லியோ திரைப்படம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை இருக்கிறது. காஷ்மீரில் சவாலான சூழ்நிலையில் 50 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில வாரங்களில் நிறைவடைய இருக்கிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ படம் ரிலீஸாக இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான இந்த LCU என்ற உலகத்தில் லியோ திரைப்படமும் இடம்பெறுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், லியோ படத்தின் நா ரெடி பாடலில் இடம் பெற்ற தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா என்னும் வரி ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை குறிப்பதாக தற்போது இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த பாடலாசிரியர் விஷ்ணு எடவன் அவர்களிடம், பாடலில் “தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா” என்ற வரிகள் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறதா இது லியோ vs ரோலெக்ஸ் தானா? லியோ திரைப்படம் LCUவில் இடம்பெறுகிறதா? என கேட்டபோது, “அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க... கத்தி என்ற வார்த்தையும் போட்டு இருக்கிறேன் அதனால் கத்தியிலிருந்து கதிரேசன் வருவாரா என்று கேட்டால் எனக்கு தெரியாது. கில்லி என்று போட்டு இருக்கிறேன் அதிலிருந்து வேலு அல்லது முத்துப்பாண்டி வருவார்களா என்று கேட்டால் சத்தியமாக எனக்கு தெரியாது. சும்மா நல்லா இருக்கேன்னு போட்டு விட்டது அவ்வளவு தான்... நன்றாக இருந்தது நீங்கள் வேண்டுமானால் புலி, யானை கூட வைத்து பாருங்கள் அந்த சொல் அங்கே வர மாட்டேங்கிறது. தேள் வந்துவிட்டது போட்டு விட்டேன். வைத்தால் நன்றாக இருந்தது அதனால் வைத்துவிட்டேன்" என பதில் அளித்தார். 

தொடர்ந்து “லியோ LCUவில் இருக்கிறதா? அது குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் ஆர்வத்தை தூண்டுகிறதே?” என கேட்டபோது, “இதெல்லாம் ஆர்வமாக இருக்கிறதா என்று கேட்டீர்கள் என்றால் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இது LCUவா என்று கேட்டீர்கள் என்றால் அது எனக்கே தெரியாது. எனக்கு என்ன ஸ்பெசிபிகேஷன்ஸ் கொடுக்கப்பட்டதோ அதை வைத்து எழுதினேன். அதன்படி எனக்கு பிடித்திருந்தது ஒரு வரியை போட்டேன் ஜாலியாக இருந்தது அவ்வளவுதான்” என பதிலளித்து இருக்கிறார். இன்னும் நா ரெடி பாடல் குறித்து சுவாரசிய தகவல்கள் பல பகிர்ந்து கொண்ட விஷ்ணு எடவனின் அந்த முழு பேட்டி இதோ…
 

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட
சினிமா

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட "நா ரெடி" பாடல் இதோ!