விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் பலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் நான்கு சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.சமீபத்தில் முடிந்த இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சி தற்போது OTT தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் புதுமுயற்சியாக ஒளிபரப்படவுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த சீசன்களில் இருந்த 16 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.ஜனவரி 30 முதல் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

முதல் முறையாக இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடக்க விழா வரும் 30ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை விஜய் டிவி தினமும் அறிவித்து வருகின்றனர்.ஏற்கனவே சினேகன்,ஜூலி உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த போட்டியாளரை அறிவித்துள்ளனர்.வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஒரு ப்ரோமோவுடன் அறிவித்துள்ளனர்.இந்த சீசன் களைகட்டவுள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.