எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் இன்று ஜனவரி 11-ம் தேதி ரிலீஸாகி இருக்கின்றன. நள்ளிரவு முதலே இரண்டு படங்களுக்குமான கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்திருக்கும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கான மாஸான விஷயங்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக வெளிவந்த விஜய் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விண்டேஜ் தளபதி விஜய் கம்பேக் என சொல்லும் அளவிற்கு பாடல்களில் தளபதியின் நடனம் மிகவும் எனர்ஜிட்டிக்காக அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் வெளி வருகின்றன.

ஒட்டுமொத்தத்தில் நல்ல கமர்சியல் திரைப்படமாக இந்த பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் வெளிவந்திருக்கும் வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியரும் எழுத்தாளருமான விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.விஜய் ரசிகர்களின் பேரன்பாலும் ஆரவாரத்தாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழுவினர் நெகழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில் முதல் காட்சி முடிந்து திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் வம்சி பைடிபல்லி, “எங்கள் அனைவருக்கும் இது ஒரு நெகிழ்ச்சியான உணர்வு. இந்த நெகிழ்ச்சியான உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்றி!” என தெரிவித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபல்லி பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த வீடியோ இதோ…