2001 ஆம் ஆண்டு வெளியான 12B படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம் . இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தில்ராஜு தயாரிப்பில் வம்சி பைடிப்பல்லி இயக்கும் "வாரிசு" திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தளபதி விஜயுடன் இணைந்து ரஷ்மிக்கா மந்தனா , சரத் குமார் , பிரகாஷ் ராஜ் ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளனர் . 

இதில் ஷாம் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் . பொங்கல் அன்று "வாரிசு" திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் "குஷி” முதல் "வாரிசு" வரை விஜயுடன் இருந்த நட்பு பற்றி அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது,

"குஷி" படத்தில் விஜய் அண்ணாவுடன் ஒரே ஒரு முறை திரையில் வந்தேன். 2001 ஆம் ஆண்டு 12B படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனேன் .பிறகு அவரை சந்தித்தேன் . மிகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் ஆதரவாகவும் பேசினார். தெலுங்கில் வெளிவந்த என்னுடய "கிக் " படத்தை பார்த்து அலைபேசியில் தொடப்புக்கொண்டு பாராட்டினார்.இப்போது வாரிசு படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.நாங்கள் சகோதரர்களாக நடிக்கிறோம். நான் பார்த்த வரையில் தொழில் ரீதியாக அவர் முன்னிலை வகிக்கிறார் . ஒரு நல்ல நண்பராக அவருடன் நான் நெருங்கி பழகியுள்ளேன் . ஒரு மனிதராக அவர் மிகவும் சிறப்பானவர் .கண்டிப்பாக அவர் இன்னும் தன் வாழ்வில் நிறைய ஆட்சி செய்ய போகிறார் . விஜய் அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

என நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். நடிகர் ஷாமின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.