தமிழ் திரை உலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை ஜாம்பவானாக திகழும் வைகைப்புயல் வடிவேலு தனது கம் பேக்கில் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின்  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்து நடிக்கும் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையக்கிறார். மாமன்னன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக வடிவேலுவின் அடுத்த நகைச்சுவை சரவெடியாக தயாராகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், யூட்யூபர் பிரசாந்த் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வருகிறது. அட்டகாசமான அந்த ட்ரெய்லர் இதோ…