இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இதனை அடுத்து மீண்டும் தனது திரைப்பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் இன்று டிசம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் கனெக்ட். மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக கனெக்ட் படம் ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து 99 நிமிடங்கள் ஓடக்கூடிய மிரட்டலான ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் நயன்தாராவின் கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.  இடைவேளை இல்லாத ஹாரர் பாடமாக ரிலீஸ் ஆகும் கனெக்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

It's U/A for #CONNECT. Runtime: 9️⃣9️⃣ mins

Get ready to experience a Tamil film without Intermission for the first time. Releasing worldwide on 22.12.2022 🔥 @VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson pic.twitter.com/jm4nzITTXN

— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 30, 2022