சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் மீது சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக மார்வெல்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக மார்வெல்ஸின் அடுத்த பிரம்மாண்ட படமாக வெளிவருகிறது தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படம்.

மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோவான தோர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கு மீண்டும் தோர் கதாப்பாத்திரத்தின் அடுத்த படமாக வரும் தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் தோர் கதாபாத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் நடிக்க, அவருக்கு வில்லனாக கிறிஸ்டியன் பேல் நடித்துள்ளார்.முன்னதாக DC காமிக்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோவான பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ்டியன் பேல் மார்வெல்ஸ் திரைப்படமான தோர் படத்தில் கோர் தி காட் புட்சர் எனும் கதாப்பாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்வெல் ரசிகர்களின் ஃபேவரட்டான காடியன்ஸ் ஆஃப் கேலக்ஸி கதாபாத்திரங்களும் இந்த முறை லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் இருப்பது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில் தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தின் அசத்தலான புதிய டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…