தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது,இந்த பட ஷூட்டிங்கின் ஆரம்பம் முதலே சில புகைப்படங்கள் லீக் ஆகி வந்தன,நேற்று பாடல் குறித்த 20 செகண்ட் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற படப்பிடிப்பு தளங்களின் லீக் குறித்து விஜய் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வீடீயோவை ரசிகர்கள் பகிர்ந்து இதுபோன்று செய்ய வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர்.