விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட அதிரடி ப்ரோமோ இதோ!
By Anand S | Galatta | August 24, 2022 20:10 PM IST

தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகி அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் பல சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ள நடிகர் விஜய் தேவர் கொண்டா அடுத்ததாக நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2வது படமாக JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் லைகர் படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். தமிழில் ஆர் கே சுரேஷ் அவர்களின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் லைகர் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து அதிரடியான புதிய ப்யோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
Tomorrow 🔥#Liger pic.twitter.com/g2ZRvHdXKd
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 24, 2022
Legend Saravanan's The Legend holds well at the box office despite new releases!
09/08/2022 03:54 PM