2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.நிவின் பாலி,சாய் பல்லவி,அனுபமா,மடோனா என்று பல பிரபலங்களை நட்சத்திரங்களாக மாற்றிய படம்.

சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.இத்தகைய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கடந்த சில வருடங்களாக வேறு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்,கடந்த வருட இறுதியில் கோல்ட் என்ற படத்தினை அடுத்து இயக்குவதாக ரசிகர்களிடம் தெரிவித்தார்.இந்த படத்தினை ப்ரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அஜ்மல் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ப்ரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படம் தமிழிலும் வெளியாகும் என்றும் இந்த படத்தின் தமிழக திரையரங்க உரிமையை மாநாடு படத்தினை வெளியிட்ட , SSI ப்ரொடக்ஷன் சார்பாக சுப்பையா சண்முகம் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.