இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தேசிய விருது பெற்றுள்ள நடிகை அபர்ணா பாலமுரளி தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் நித்தம் ஒரு வானம் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தொடர்ந்து மலையாளத்தில் இனி உத்தரம், பத்மினி, காப்ப, உலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் மலையாளத்தில் இயக்குனர் சார்லி டேவிஸ் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள திரைப்படம் சுந்தரி கார்டன்ஸ். அபர்ணா பாலமுரளி மற்றும் நீரஜ் மாதவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சுந்தரி கார்டன்ஸ் திரைப்படத்தை ஏலியன்ஸ் மீடியா சார்பில் சலீம் அஹமத் தயாரித்துள்ளார். 

ஸ்வரூப் ஃபிலிப் ஒளிப்பதிவில் அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துள்ள சுந்தரி கார்டன்ஸ் திரைப்படத்திற்கு சாஜித் உன்னிகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுந்தரி கார்டன்ஸ் திரைப்படம் வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சுந்தரி கார்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…