தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது கடின உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த மாஸ்டர் படம் கடைசியாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங்கை டிசம்பரில் நிறைவு செய்தார் விஜய்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தயாராகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள விஜய் குறித்து ஒரு சிறிய புகைப்படம்,வீடியோ என எது வந்தாலும் வைரலாகி விடும்.கடந்த வருடமும் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் Favourite ஆக இருந்தன.

தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தளபதி விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்