தளபதி விஜய்-ராஷ்மிகாவின் ரஞ்சிதமே CHALLENGE... வாரிசு பட வீடியோ இதோ!
By Anand S | Galatta | November 08, 2022 10:57 AM IST
தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பால் தன்னிகரற்ற கதாநாயகராக தமிழ் சினிமாவில் உயர்ந்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார்.
வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீஸாகிறது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் அவர்களின் வரிகளில் தளபதி விஜய் மற்றும் MM.மானசி இணைந்து பாடி வெளிவந்த ரஞ்சிதமே பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பட்டியை கிளப்பி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
வழக்கம்போல் தனது ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் மனதை தளபதி விஜய் கவர்ந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சிதமே பாடலில் இடம் பெற்ற "ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே.. அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே" எனும் பாடல் வரிகளுக்கு விஜய் மற்றும் ராஷ்மிகா இணைந்து நடனமாடும் கலக்கமான ரஞ்சிதமே சேலஞ்ச் ரீல்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு பல ரசிகர்களும் தளபதி விஜயின் அதே நடன அசைவுகளை Re-Create செய்ய #RanjithameChallenge சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலும் #ArabicKuthuChallenge என ட்ரெண்டானது பீஸ்ட் படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக அமைந்தது. அந்த வகையில் ரஞ்சிதமே பாடலின் #RanjithameChallenge -ம் வாரிசு படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கலக்கலான அந்த ரஞ்சிதமே சேலஞ்ச் ரீல்ஸ் வீடியோ இதோ…
Recreate the hookstep & Join the #RanjithameChallenge ❤️
— Sri Venkateswara Creations (@SVC_official) November 7, 2022
Use this audio ▶️ https://t.co/3jgEvwEXIX
Get featured in our stories#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #Ranjithame #Varisu #VarisuPongal pic.twitter.com/HJBinJj6Kg