வலிமை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  முன்னதாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் 3-வது முறையாக அஜித் குமார் - வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி ராஜதந்திரம் வீரா, சிபி புவன சந்திரன், பிக் பாஸ் பாவ்னி ரெட்டி மற்றும் பிக்பாஸ் அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியிடாக ரிலீஸாகிறது. அதே பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக துணிவு திரைப்படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங் தற்போது நடைபெறுவதாக பரபரப்பான அப்டேட் கிடைத்துள்ளது.  நடிகர் சிபி புவன சந்திரன் - அஜித்குமார் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#ThunivuPongal2023 #songshoot #thala #Ajithkumar ❤️🤗 pic.twitter.com/a7VnyjDlCF

— Ciby Bhuvana Chandran (@cibychandran) November 7, 2022