தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தளபதி 67. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர்கள் லோகேஷ் உடன் தளபதி விஜய் இணைவது, விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம், லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU, தளபதி விஜயின் முழு ஆக்சன் திரைப்படம், 100% லோகேஷ் கனகராஜ் படம் என அடுக்கடுக்காக பல காரணங்கள் இந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தில் தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்திற்கும் வாரிசு ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும். முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு (வாரிசுடு) திரைப்படம் தற்போது தயாராகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் முதல் முறை நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இதுவரை வெளிவந்துள்ள வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வாரிசு படத்தின் ட்ரெய்லரும் பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்களை கவரும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மிக்ஸிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

#Varisu ⭐️🤟🏽❤️

See you guys In theatres FIRST DAY FIRST SHOW #VarisuPongal 💃 pic.twitter.com/DvwH57mtoY

— thaman S (@MusicThaman) January 7, 2023