பொங்கல் நாளையொட்டி பிரம்மாண்ட அளவில் வெளியாகவிருக்கும் பிரபல தாயரிப்பாளர் போனி கபூர் தாயரிப்பில் எச் வினோத் அஜித் கூட்டணியில் உருவாகிய 'துணிவு' படத்தின் டிரலைர் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜனவர் 11 அன்று வெளிவரவிருப்பதால் இறுதிகட்ட விளம்பர பணியில் தீவிரம் காட்டிவரும் துணிவு படக்குழு. இதனிடையே நமது கலாட்டா மீடியாவில் கலந்து கொண்ட துணிவு படத்தின் இயக்குனர் எச் வினோத் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் துணிவு படம் டிரைலர் 'பீஸ்ட்' திரைப்படம் போல் உள்ளது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

“ஒருவேளை படம் ஒரே படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றிருப்பதால் அப்படி அவர்களுக்கு தோன்றிருக்கும். அதுவும் நல்லது தான். அப்படி பீஸ்ட் படம் போல் உள்ளது என்று நினைத்து பார்ப்பவர்களுக்கு துணிவு அப்படி இல்லை என்று தோன்றும் போது இன்னும் கூடுதல் சிறப்பாகவே படம் இருக்கும்... இதுவும் ஒரு பெஸ்ட் புரோமஷன் தான்” என்று குறிப்பிட்டார்.

மால் ஹைஜாக்கிலிருந்து மக்களை காப்பாற்றும் ராவ் ஏஜன்ட்  என்ற கருவை மையமாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம் பீஸ்ட்.  பெரும்பாலான படம் மால் உள்ளே நடந்திருக்கும் என்பதால் துணிவு படத்தின் டிரைலரை மக்கள் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

மேலும் துணிவு படம் வெளியாகும் அதே தேதியில் வெளியாகிறது விஜயின் வாரிசு திரைப்படம். வம்சி இயக்கத்தில் குடும்ப படமாக உருவாகிய படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு  விஜய் அஜித் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதே நிலையில் இருதரப்பிலிருந்தும் ட்ரைலர் குறித்து  இதுபோன்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.