பிரபல தாயரிப்பாளர் போனி கபூர் தாயரிப்பில் எச் வினோத் அஜித் கூட்டணியில் உருவான ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளுக்கு வரவிருக்கின்றன. இதனிடையே படத்தின் பாடல்கள் டிரைலர் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. மேலும் பல இடங்களில் வெளிவரவிருக்கு துணிவு படத்தை அஜித் ரசிகர்கள் அமோகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

ஜனவரி 11 ம் தேதி வெளிவரவிருக்கும் துணிவு படத்தின் இறுதிகட்ட விளம்பர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கலாட்டா மீடியா பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்ட துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் துணிவு படம் உருவானவிதம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அதன்படி லோகேஷ் கனகராஜ் விஜய் பக்கம் நின்று ஒரு தரத்தை வழங்குகிறார் நீங்கள் அஜித் பக்கம் ஒரு தரத்தை வழங்குகிரீர்கள் இதை எப்படி அணுகுகிறீர்கள் என்ற கேள்விக்கு,

“எல்லாமே பார்வை வேறுபாடு தான். லோகேஷ் கனகராஜ் நல்ல கதைச்சொல்லி குறிப்பா சமகால சினிமா குறித்த புரிதல், அதிலிருந்து எதிர்புறம் நான். அவர் கிரைம் உலகத்தின் கதைகளத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். நான் கிரைம் உலகத்தின் பின்னணியில் உள்ள உணர்வுகள் குறித்து பணியாற்றி வருகிறேன். ஒரே கிரைம் மையமாக வைத்து இருவரும் வெவ்வேறு மாதிரியான படங்களை கொடுத்து வருகிறோம். என் படங்கள் எந்தளவும் சமூக உளவியல் பிரச்சனைகளை  உருவாக்கிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் தான் வலிமை படத்தில் என்கவுண்டருக்கு எதிராக பேசியிருப்பேன்.  நான் ‘தீரன்’ படத்தை போல் ‘வலிமை’ இருந்து விட கூடாது னு விரும்பினேன். லோகேஷ் ‘கைதி’ போல் ‘விக்ரம்’ இருக்கணும்னு நினைத்தார். இதுதான் எங்களுக்குள்ள இருக்குற வித்யாசம்”  என்று இயக்குனர் எச். வினோத் குறிப்பிட்டார்.

இயக்குனர் எச் வினோத் துணிவு படம் குறித்தும் மற்றும் அவர் திரைப்பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முழு காணொளி :