தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

அதே பொங்கல் வெளியீடாக நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - அஜித் குமார் நடிக்கும் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக ரிலீஸாக இருப்பது சினிமா ரசிகர்களுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்ததாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் முதல் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே முன்னதாக இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸாகிறது.  Sensei என்ற பெயரில் ஜப்பானில் வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மஜாப்பா மஜாப்பா 🥳💥#Thalapathy @actorvijay @Dir_Lokesh #Master #ThalapathyVijay #Japan #Sensei #LokeshKanagaraj pic.twitter.com/EMW2IrFWGb

— Galatta Media (@galattadotcom) October 30, 2022