தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.அடுத்ததாக விஜய் Beast படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா,டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது,விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமன் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தளபதி 66 குறித்த கேள்விக்கு மறுக்காமல் பின்னர் பேசலாம் என்று அதனை டீல் செய்தார் தமன்.அரபிக்குத்து பாடல் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் சூப்பர் பாடல் எனவும் பாராட்டினார்.விரைவில் தளபதி 66 அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.