தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களையும், மாஸான கமர்ஷியல் திரைப்படங்களையும் வழங்கி வரும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த அரண்மனை-3 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் உடன் இணைந்து சுந்தர்.C இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த புதிய படத்தில் பிரபல தொகுப்பாளினி DD (திவ்யதர்ஷினி) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகராகும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இயக்குனர் சுந்தர்.C  தலைநகரம் 2, One 2 One மற்றும் பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி வருகிறது சுந்தர்.C நடித்துள்ள வல்லான் திரைப்படம். இயக்குனர் VR மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகியுள்ள வல்லான் திரைப்படத்தை VR Della பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. 

சுந்தர்.C-யுடன் இணைந்து தன்யா ஹோப், ஹிபா பட்டேல், அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ், சாந்தினி, தலைவாசல் விஜய், ஜெயக்குமார், TSK ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் வல்லான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள வல்லான் படத்தின் டீசர் இதோ…