“எங்கள் நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றவர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காட்டமாக தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் இன்று 12 வது நாளாக நீடித்து வருகிறது. இன்று அதிகாலை வரை உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், ரஷ்யா சார்பில் பாதிக்கு பாதி அளவில் இழங்குப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான முதல் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், அதன் தொடர்ச்சியாக, 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் முதல் முறை ஒத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகே நடைபெற்றது. ஆனாலும், இந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு புதினுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, 3 வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

எனினும், உக்ரைன் நாட்டில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட மற்ற வெளிநாட்டினர், சொந்த நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கித் தவித்தனர்.
இதனால், உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமில்லாமல், மற்ற நாட்டு மக்களும், கடும் சவால்களை கடந்து அங்குள்ள அண்டை நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. 

இப்படியான சூழலில் தான், “உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உள்பட பிற வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷ்யா தயார்” என்று, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்ய தூதர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷியா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

என்றாலும், சில மணி நேர இடைவெளியில் போர் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக, இந்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள் சுமார் 15 லட்சம் பேர், அந்நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த தகவலை ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கமிஷனர் பிலிப்போ கிராண்டி, தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தான், “உக்ரைன் நாட்டின் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற ரஷ்யாவை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டோம்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

அத்துடன், “எங்களது மண்னில் இந்த போரில் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிப்போம் என்றும்,  இந்த பூமியில் கல்லறையத் தவிர அமைதியான இடம் இல்லை” என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்று, இந்த போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்ப்போம்” என்றும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியுடன் கூறியுள்ளார்.

அதே போல்,“கார்கீவ் நகரில் உள்ள அணு உலையை தகர்த்து, ரஷியா மீது பழிபோட உக்ரைன் பாதுகாப்பு படை திட்டமிட்டு உள்ளதாக” ரஷ்யாவும், தற்போது புதிய குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளது.

இதனிடையே, “உக்ரைனில் சண்டைபோட சிரியாவைச் சேர்ந்தவர்களை ரஷ்ய ராணுவம் தேர்வு செய்துள்ளதாக” அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் செய்தி வெளியிட்டு உள்ளது, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.