உக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், மற்ற இடங்களில் பகுதி நேரமாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டு வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் என்றாலே, பெரும் குற்றம்தான்!

ஆமாம், முதலில் வெற்றியைத் தரும் போர் களம், பின்னாளில் அதுவே குற்றமாகவும் மாறி நிற்கும்.

“எங்கெல்லாம் போர் குற்றம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் மனித படுகொலை மட்டுமில்லாமல், மனித உரிமை மீறிய பல்வேறு கொரூர செயல்களும்” நடப்பது இயல்பான ஒன்று தான்0.

அதனால் தான், “போர் என்றால், எல்லா விதமான பாதிப்புகளும் இருப்பது இயல்பு தான்” என்கிற ஒரு சொல்லாடலும் உண்டு. 

அந்த “எல்லா விதமான இழப்பு” என்பது, பொள், செல்வங்கள், கட்டங்கள் மட்டுமல்ல, அந்த நாட்டு பெண்களும் தான்” என்பது தான் இதன் பேருண்மையான விசயமாக உள்ளது.

அதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுக்கத் தொடங்கிய நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 11 நாட்களை கடந்து, 12 நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷ்யா கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது.

ஆனாலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், உக்ரைன் நாட்டை விட்டு, கிட்தட்ட 15 லட்சம் பேர், அந்நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

எனினும், ரஷ்யா அறிவித்தபடி உக்ரைனில் போர் நிறுத்தமானது குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை என்கிற தகவலும் வெளியாகி இருக்கின்றன. இந்த கால இடைவெளியை பயன்படுத்தி, அந்நாட்டு மக்கள் பெரும்பாலனவர்கள், உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாகவும் அதிலும் குறிப்பாக, உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அளவில் அந்நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் செய்தகிள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்ட 7, 8 மணி நேர கால இடைவெளியைத் தவிர, மற்ற நேரங்களில் ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, “உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள இந்த போரானது, 21 ஆம் நூற்றாண்டில் இது வரை கண்டிராக மிகவும் உக்கிரமான போராக மாறி உள்ளதாக” பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், உக்ரைனில் மேலும் சில பகுதிகளில் ரஷ்யா தற்காலிகமாக போர் நிறுத்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

இதற்கு காரணமாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் அருகே நடந்த போரில் பல குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமையாளர்களின் நெஞ்சை நொறுக்கி எரிந்தது.

இந்த சூழலில் தான், இந்த போர் இன்றுடன் 12 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், “உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டு உள்ளதாக” அறிவித்து உள்ளது.

அதன் படி, உக்ரைன் நாட்டில் உள்ள “கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல்” ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக போரை நிறுத்தவதாக ரஷ்யா அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இப்படியாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 வது நாளாக நீடித்து வரும் நிலையில், 4 பகுதிகளில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது உலக நாடுகளின் கவனத்தையும் திருப்பி உள்ளது.

இதனிடையே, உக்ரைன் போர் காரணமாக, அந்நாட்டில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அந்நாட்டில் அப்பாவி மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.